மரக்கறி விலைகளில் மாற்றம்!

சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலை 100 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை நேற்று (03.05) 160 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டிக்காயின் விலை 200 ரூபாயை விட குறைவாகவுமே பதிவாகியிருந்ததுடன், பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 300 முதல் 350 ரூபா வரை பதிவாகியுள்ளது.

இதேவேளை, பாகற்காய்,கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் சற்று உயர்வடைந்துள்ளதுடன், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கானது 170 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளை நுவரெலியா உருளைக்கிழங்கு 250 ரூபா தொடக்கம் 300 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Social Share

Leave a Reply