பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் பிரேமித பண்டார தென்னகோன் இப்பதவியில் செயற்படுவார் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே 6ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிரித்தானியா சென்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரேமித பண்டார தன்னகோன் ஜனாதிபதியிடமிருந்து நியமனத்தைப் பெற்றுக்கொண்டதுடன், ஜனாதிபதி இலங்கை திரும்பும் வரை அப்பதவியில் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.