வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05.05) 6 பெண் கைதிகள் உட்பட 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்றும் (05.05) நாளையும் (06.05) சிறைச்சாலை கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை சந்திக்க செல்லும் அவர்களின் உறவினர்கள், ஒருவருக்கு போதுமான அளவு உணவுகளை மட்டும் எடுத்து செல்லுமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.