தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் (Troup) தோட்டத்தில் இன்று (05.05) மாலை 4 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
தரம் 8ல் கல்வி பயிலும் குறித்த சிறுமியின் பெற்றோர் கொழும்பில் தங்கி வேலை செய்பவர்கள் எனவும், தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே சிறுமியும் அவரது சகோதரனும் வாழ்ந்து வருவதாகவும், குறித்த சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இருந்திருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.