கழுத்துறையில், 16 வயதான பெண் ஒருவர் இறந்த நிலையில் நிர்வாணமாக சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று(06.05) களுத்துறை பிரதான வீதியில் விடுதி ஒன்றுக்கு பின் புறமாக ரயில் பாதைக்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இறப்பிற்கான காரணம் மற்றும் கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த பெண், இன்னுமொரு பெண் மற்றும் இரு ஆண்களுடன் நேற்று மாலை குறித்த விடுதிக்கு சென்று, இரண்டு அறைகளை பதிவு செய்துள்ளார். சில மணி நேரங்களில் ஒரு ஆணும், பெண்ணும் அந்த இடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் இறந்த பெண்ணுடன் இருந்த ஆணும் வெளியேறியுள்ளார். அதன் பின்னர் இறந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒரு ஜோடியை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இறந்த பெண்ணுடன் இருந் ஆணை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.