சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நீதிமன்றத்தின் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இது இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக கடந்த ஆண்டு நவம்பர் 5ம் திகதி இரவு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டத்துடன், வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதன்படி, அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது எனினும் முறைப்பாடு வழங்கிய பெண் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் தாம் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் மூன்றை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.