பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரிக்கை!

அண்மைய நாட்களாக நாட்டில், பிள்ளைகள் காணாமல்போகும், அல்லது கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பில் அதிக தகவல்கள் வெளியாவதால் அது தொடர்பில் பெற்றோர்கள் அதிக அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

பாடசாலை, மேலதிக வகுப்புகள் மற்றும் பொது இடங்களுக்கு அனுப்பும்போதும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்படுங்கள், அவர்கள் யாருடன் பழகுகின்றனர் என்பது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துங்கள். நாட்டிலுள்ள சட்ட திட்டங்களை காட்டிலும் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோரின் பங்கு அதிகம் இருப்பதை உணர்ந்து செயற்படுங்கள்.

வருமுன் காப்பது ஆபத்தை தடுக்கும் என்பதால், இவ்வாறான விடையங்களை அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply