கொழும்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை தின நினைவேந்தல் தீபம் ஒரு குழுவினரால் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னுமொரு குழு கோஷங்களை ஏற்படுத்தி நினைவேந்தலில் ஈடுபட முயன்றவர்களை தாக்க முற்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த குழுவினர், புலிகளின் நினைவேந்தல் எமக்கு வேண்டாம், உனடடியாக நிறுத்துங்கள் எனும் வாசகங்கள் பொருந்திய பதாதைகளையும் கையில் ஏந்தி இருந்தனர்.
நினைவேந்தல் செய்வதில் எதுவித குற்றமும் காணப்படவில்லை என இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தவர்கள் தெரிவித்தும், இருதரப்பினர் மத்தியிலும் வாக்குவாதங்கள் அதிகரித்தன.
குறித்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் ஏற்கனவே பொலிஸார் இரானுவத்தினர் பாதுக்கப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் அவர்களையும் மீறி தங்களை தாக்க முற்பட்டதாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இரு தரப்பையும் இராணுவம் மற்றும் பொலிஸார் குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அமைதியான முறையில் நினைவேந்தலை மேற்கொண்ட வேளையில் தம்மை இடையூறு செய்தவர்களை தடுக்காமல், தம்மை காவற்துறை அப்புறப்படுத்தியாக நினைவேந்தலை மேற்கொண்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தீபம் ஏற்றும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டிருந்தார்.
சம்பவ இடத்திலிருந்து அனைவரும் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் பதட்ட நிலை தணிந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு தொடர்கிறது.




Photo Credit – Krish