மின்சார சபையின் யோசனனையை ஏற்றுக்கொள்ள முடியாது – PUCSL

ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் மின்சார கட்டணத்தை மூன்று வீதத்தால் குறைப்பதற்கு மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ள முடியாதது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (18.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, ஜூலை 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட மின் கட்டண முன்மொழிவு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கடந்த (15.05) திகதி பிற்பகல் கையளிக்கப்பட்டது.

இதன்படி மின் கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டிருந்தது.

மின் உற்பத்தி தரவு மற்றும் விநியோக தரவுகள், எரிபொருள், நிலக்கரி மற்றும் இதர மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் மின்சார உற்பத்தித் திட்டம் மற்றும் இந்த ஆண்டுக்கான தேவை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த யோசனை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் இட்டுள்ள பதிவில், மின்சார உற்பத்திக்கான செலவுகள் குறைந்துள்ளதுடன், டீசல், பெட்ரோல், நிலக்கரி விலையும் குறைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மின்சாரத் தேவை சுமார் 18 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும், தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு சுமார் 20 வீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply