திரிபோஷ உற்பத்திக்கான சோள இறக்குமதிக்கு வரிச் சலுகை!

திரிபோஷ உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

லங்கா திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்திற்கு அறவிடப்படும் விசேட வர்த்தக வரி 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

மே மாதம் 18ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேரிச்சம்பழம் இறக்குமதிக்கு வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகையை மே 18ம் திகதி முதல் நீக்குவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Social Share

Leave a Reply