நுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் காணாமல்போன நபர் ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுப்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவாஎலிய காட் தோட்டத்தில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நேற்று (21.05) குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமற்போன நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் நாய்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Social Share

Leave a Reply