கயானாவில் தீ விபத்து – 19 சிறுவர்கள் பலி!

கயானாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கயானாவில் உள்ள மஹிதா மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் நேற்று (22.05) நள்ளிரவு இடம்பெற்ற தீ விபத்தில் 18 சிறுமிகள் உட்பட ௧௯ பேர் உயிரிழந்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக தீயை அணைக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தினால் ஏற்பட்ட இழப்பு காரணமாக, அந்நாட்டில் 03 நாட்கள் துக்க தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply