கொழும்பில் இருந்து காங்கசந்துறை வரையிலான ரயில் சேவை விரைவில் ஆரம்பம்!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவையை எதிர்வரும் ஜூலை 15ம் திகதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் பாதை திருத்த பணிகள் காரணமாக வடக்கு நோக்கிய புகையிரத சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான புகையிரத பாதையின் திருத்தப் பணிகள் அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் இருந்து காங்கசந்துறை வரை மீண்டும் புகையிரத சேவையை ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தே புகையிரத திட்ட பணிப்பாளர் திரு அசோக முனசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply