நாளை (31.05) முதல் பொசொன் வாரம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மிஹிந்தாலய, அதமஸ்தான, தந்திரிமாலய ஆகிய இடங்களை மையப்படுத்தி பொசொன் விழாவை நாளை (31.05) முதல் எதிர்வரும் 6ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பொசொன் வாரத்தில் குறித்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாரத்தில் இறைச்சிக் கடைகளை மூடுமாறு உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தப் பகுதிகளுக்கு மதுபானம் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் மக்களைக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொசொன் பண்டிகையை களியாட்டமாக மாற்றக் கூடாது என்றும், கடும் நிதிச் சிரமங்களுக்கு மத்தியிலும் மக்கள் வசதிக்காக பல ஏற்பாடுகளை அரசு தயார் செய்துள்ளதால் உரிய வகையில் இந்நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.