நியூசிலாந்தின் அக்லாந்து தீவுக்கு அருகில் இன்று (31.05) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.