தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஆயேஷ் பெரேராவின் சடலத்தை அவரது இல்லத்தில் இருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
எனினும், இந்த மரணம் கொலையா, தற்கொலையா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே உறுதி செய்ய முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
42 வயதுடைய நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஆயேஷ் பெரேரா இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.