யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருவரை வாள்களால் தாக்கி படுகாயப்படுத்திய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 25ம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (01.06) யாழ்ப்பாணம் பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மேலும் இரு சந்தேக நபர்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்றும், முகத்தை மறைத்திருந்த 4 கறுப்புத் துண்டுகளும் வண்ணாரப்பன்னை வீதியில் உள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மானிப்பாய் மற்றும் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இன்று (02.06) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.