பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

அனர்த்த நிலைமையை ஏற்படின் அதனை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில இடங்களில் வெள்ள நிலைமை காணப்பட்டதுடன், அந்த பகுதிகளில் வாழும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இலங்கை இராணுவம் உடனடியாக செயற்பட்டன.

எனவே, எதுவித சிக்கல்களும் இல்லாமல் பரீட்சை எழுதுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Social Share

Leave a Reply