நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு பிணை!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

இந்நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply