தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வன்மையாக கண்டித்துள்ளார்.
இன்று (07.06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தை சேர்ந்த ஓர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்நிலை எனில் சாதாரண மக்களின் நிலைமையினை சற்று சிந்தித்து பாருங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அனைவரும் மௌனம் காப்பது ஏன் என்பதை தன்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பதையும் இரா. சாணக்கியன் சுட்டிக்காட்டியிருந்தார்.
https://fb.watch/k-Um42t2n7/?mibextid=yAzciw