இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (07.06) ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வ்தேசப் போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரினை 2-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. முதல் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிந்தாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் இலங்கை அணி சிறப்பான வெற்றிகளை பெற்றுக்கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டடத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது. இதில் மொஹமட் நபி 23(23) ஓட்டங்களையும், இப்ராஹிம் சட்ரன் 22(21) ஓட்டங்களையும், குல்படின் நைப் 20(21) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 4 விக்கெட்களையும்,
வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும், லஹிரு குமார 2 விக்கெட்களையும், மஹேஷ் தீக்ஷண 1 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 16 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 120 ஓட்டங்களை பெற்றது. இதில் திமுத் கருணாரட்ண ஆட்டமிழ்க்காமல் 56(45) ஓட்டங்களையும், பத்தும் நிசங்க 51(34) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குல்படின் நைப் 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.
இந்த போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் துஷ்மந்த சமீர தெரிவு செய்யப்பட்டார்.