SL Vs AFG – மழை காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 228 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 2.4 ஓவர்களில் 10 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 228 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், ரஹமனுள்ள குர்பாஸ்(68), ரஹ்மத் ஷா(58) இரண்டாவது விக்கெட்டுக்காக 113 ஓட்டங்களை பகிர்ந்து பலமான நிலைக்கு கொண்டு சென்றனர். முதற் போட்டி போன்றே செல்கிறது என்ற நிலை ஏற்பட இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் தொடர் அழுத்தம் வழங்கி விக்கெட்களை கைப்பற்றியமையினால் ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்த முடிந்தது. இருப்பினும் இறுதி நேரத்தில் மொஹமட் நபி தனித்து நின்று துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.

சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இணைந்து விக்கெட்களை கைபபற்ற்றினார்கள்.

கசுன் ரஜித மூன்று விக்கெட்களையும், மஹீஸ் தீக்ஷன , லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply