திடீரென இறந்த காகங்கள் – பரிசோதனைகள் ஆரம்பம்!

புத்தளம் – நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50ற்கும் அதிகமான காகங்கள் திடீரென்று உயிரிழந்துள்ளன.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, குறித்த இடத்திற்கு வந்த மிருக வைத்திய அதிகாரிகள் உயிரிழந்த காகங்களை பார்வையிட்டு, உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக எடுத்து சேன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்படி அதிகமான காகங்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply