நிதி மோசடிகள் தொடர்பான பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை வென்னப்புவ பொலிஸார் நேற்று (07.06) கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, தொழில் வாய்ப்புகளை வழங்காது பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் வென்னப்புவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற 8 முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை நேற்று மதியம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 லட்சம் ரூபாவுக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (08.06) மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.