வவுனியாவில் கஜமுத்து மீட்பு – இருவர் கைது!

வவுனியா நகரில் கடந்த (10.06) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்டபோது அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்க்கப்பட்டது.

இதனையடுத்து காரில் இருந்த 26 மற்றும் 23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தெஹியந்தர, ஹக்மன பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply