அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தில் மாற்றம்!

ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்தியமைக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மின் கட்டண திருத்தத்தின்படி மொத்தமாக 3% மட்டுமே குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பபாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமையவே குறித்த கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணக் குறைப்பின் படி, 0 முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் 26.9 சதவீதத்தால் குறைக்கப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், 31 முதல் 60 அலகுகள் வரையிலான மின் கட்டணம் 10.8 சதவீதத்தாலும், 61 முதல் 90 அலகுகள் வரையிலான மின் கட்டணம் 7.2 சதவீதத்தாலும், 91 முதல் 180 அலகுகள் வரையிலான மின் கட்டணம் 3.4 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply