இன்று காலை முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். வரக்காபொல, துல்கிரிய பகுதியில் இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தில் 40 வயதான ஆண் அவரின் 39 வயதான மனைவி, அவர்களின் 13 வயது மகன் ஆகியோர் இறந்துள்ளனர்.
டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, டிப்பர் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இறந்தவர்களது உடல்கள் வரக்காபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.