உலகின் முதல் செயற்கை மனித கரு உருவாக்கம்!

உலகின் முதல் செயற்கை மனித கருவை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதன்மூலம் இனி கருவை உருவாக்க விந்தணுக்கள் தேவையில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இது தொழிநுட்ப வளர்ச்சியின் புதிய பரிமாணமாக பார்க்கப்பட்டாலும், எதிர்காலத்தில் மனித இருப்புக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

உலகிலேயே முதல் முறையாக விந்தணுவும் கருமுட்டையும் இல்லாமல் கருவை உருவாக்க முடியும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலை சேர்ந்த வீஸ்மேன் அறிவியல் நிறுவனம் ஆய்வு செய்தது.

ஸ்டெம்செல்ஸ் வைத்து இதனை ஆய்வாளர்கள் சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்த ஸ்டெம் செல்லில் இருந்து தான் கருவில் இருக்கும் குழந்தையின் அனைத்து உடல் உறுப்புகளும் உருவாகிறது.

புற்றுநோய் முதல் தீராத பல நோய்களையும் ஸ்டெம் செல்ஸ் மூலம் குணப்படுத்த முடியும் என நம்பும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது இது குறித்த ஆராய்ச்சியிலேயே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Social Share

Leave a Reply