கடும் சிக்கல்களுக்கு மத்தியில் சீனாவிற்கு பயணித்த அமெரிக்க தலைவர்!

அமெரிக்காவிற்கும் – சீனாவிற்கும் இடையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று (18.06) சீனாவிற்கு பயணித்துள்ளார்.

சீனாவில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் அவர், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இடம்பெறவேண்டிய இந்த விஜயம், சீனாவின் உளவு பலூன் விவகாரத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

2021 ஜனவரியில் ஜனாதிபதி ஜோ பிடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, சீனாவிற்கு விஜயம் செய்யும் முதல் அமெரிக்க அரசாங்க அதிகாரி பிளிங்கன் ஆவார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான சீனாவும், அமெரிக்காவும் பல்வேறு காரணங்களால் முரண்படுகின்றன. குறிப்பாக சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய சம்பவம் சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இதற்கிடையே சீனா, தைவானை தங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதுகிறது. அதனை ஆக்கிரமிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தடையாக அமெரிக்காவுள்ளது. தைவானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து வருகின்றது. இந்த விவகாரம் சீனா- அமெரிக்காவின் உறவு மோசமடைய முக்கிய காரணியாக அமைந்தது.

Social Share

Leave a Reply