பிரித்தானியாவிற்கான, இலங்கையின் உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டு வந்த அவர், ஆகஸ்ட் 01 முதல் பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார்.
இவர் கடந்த 2007 தொடக்கம் 2010 வரை வெளியுறவுத்துறை அமைச்சரவை அமைச்சராக பணியாற்றியதுடன், சில காலம் கிழக்கு மாகாண ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.