இன்று (19.06) முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ‘வாகீர்’ கொழும்புக்கு செயல்பாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
‘உலகளாவிய பெருங்கடல் வளையம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் 9வது சர்வதேச யோகா தினத்தை (IDY) கொண்டாடும் வகையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
‘அண்டை நாடுகளுக்கும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இரு அண்டை கடற்படைகளுக்கு இடையே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
இருப்பினும், நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தின் போது, பார்வையாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.