ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறையில் நடைபெற்ற கலவரத்தில் 41 பெண் கைதிகள் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பாவின் புறநகர் பகுதியில் சிகாஸ் எனப்படும் பெண்களுக்கான சிறைச் சாலை உள்ளது.
குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற 800க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறைச்சாலையில், நேற்று (21.06) இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறிய நிலையில் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
சிறை காவலர்களால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததை அடுத்து சிறப்பு அதிரடி படை துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.