சிவில் விமான சேவைகள் அமைச்சரின் கவனக்குறைவான முடிவால் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் உள்ள சாரதிகள் பாதிப்படைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (21.06) கருத்து வெளியிட்ட அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் 2000 இக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடகை வாகனங்கள் சேவையில் உள்ளது. இதில் 1057 பேர் பணியாற்றி வருகின்றனர்.
அண்மையில் விமான நிலையங்களுக்குப் பொறுப்பான அமைச்சர், இத்தகைய சேவை இருந்தபோதிலும் Uber மற்றும் Pick Me சேவைகைளை இணைக்க முடிவு செய்துள்ளார். இதனால் நீண்ட காலமாக வாடகை சேவையை பயன்படுத்தி வரும் தரப்புக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே புதிய எண்ணக்கருக்களை அமுல்படுத்த வரும் போது எந்தத் தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையில் அது மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.