பதவி விலக தயார் – கெஹலிய ரம்புக்வெல்ல!

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளாவிட்டால், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலை, மற்றும் சிறுவர் வைத்தியசாலையில், மயக்கமருந்து செலுத்திய இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து, இன்றுய (22.06) பாராளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்த காரணங்களை விளக்கிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, காரணங்கள் எதுவாக இருந்தாலும் இவ்வாறான குறைபாடுகளுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

“நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட சில முடிவுகளில் இருந்து சில விளைவுகளைச் சந்தித்துள்ளோம என்றும், சுகாதாரத் துறையை எவ்வாறு சீரமைப்பது என்பதை நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

“மறுபுறம், நிதியைப் பெறுவதில் சிக்கல் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாவிட்டால், பதவிகளை வகிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply