பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வந்த கொள்கலனுக்குள் ஹெரோயின் போதைப்பொருளை பதுக்கிவைத்து கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உருளைக்கிழங்கு பொதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 16 கிலோ 193 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் இலங்கை சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 647,720,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள மூவரையும், பொலிஸ் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.