முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டார் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
நேற்று (22.06) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு தேவையானதை விடவும் அதிகமாக செய்துள்ளார் எனவே அவர் மிகவும் சிறந்த தலைவர் என தாம் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஓய்வு பெற்று தனது ஓய்வு நேரத்தை அனுபவிக்க வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளதாக தாம் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயங்காது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.