18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான ஐந்து தினங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஐந்து விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீ ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் வேலை செய்தமைக்காக வழங்கப்படவேண்டிய 50 சதவீத கொடுப்பனவை வழங்காமையினால் விமானிகள் பணிக்கு வருவதில்லை எனவும், 80 விமானங்களுக்கான விமானிகள் இல்லையெனவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயங்களை விமான சேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா கடந்த செல்ல முயற்சிப்பதாகவும், இதன் மூலமாக ஸ்ரீலங்கன் விமான சேவையினை விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.
இந்த 12 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதனால் விமான நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள விமான நிலையங்களில் பயணிகள் தங்க வைக்கப்படுவதாகவும், இதன் காரணமாக பல மில்லியன் செலவாகுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் வண்டிகள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும், பயணிகள் தங்களது பயண பைகளை வீதியில் இழுத்து செல்வதாகவும் பாரளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.