நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கடந்த சில மாதங்களாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 608,489 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த மாதத்தில் மட்டும் 84,003 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் ரஷ்யா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, சீனா போன்ற நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தில் 719,978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply