மன்னார் – பள்ளமடு பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 86 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் மன்னார் பொலிஸாரால் நேற்று (02.07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சா பொட்டலங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.