லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்!

லிட்ரோ எரிவாயுவின் விலையை இன்று (04.07) நள்ளிரவு முதல் குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 204 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூ. 2982.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 83.00 ருபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1198.௦௦ ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 37.00 ருபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூ. 561.00 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் இதுவரை 5 தடவைகள் எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் நான்கு சந்தர்ப்பங்களிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி கடைசியாக விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, இதில் 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டது.

Social Share

Leave a Reply