லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைவடைகிறது!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பை அடுத்து தற்போது லாஃப்ஸ் நிறுவன சமையல் எரிவாயுவின் விலைகளும் குறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இன்று (ஜுலை 06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோ கிராம் நிறையுடைய  லாஃப்ஸ் எரிவாயு ஒன்றின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 3690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல் 5 கிலோகிரம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1476 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Social Share

Leave a Reply