முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளை அரசாங்கம் புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தும் வரை தொடர திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ‘அசவெசும’ நலன்புரி உதவித் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நலன்புரி உதவித் திட்டம் தொடர்பில் இதுவரையில் 760,000 முறைபாடுகள் மற்றும் 10,000 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும், அதிக தேவையுள்ளோரை இலக்காகக் கொண்டு விரைவில் மதிப்பீடு செய்யப்படும் என்றும், வளங்கள் சமமாக விநியோகிக்கப்படுவதும் உறுதிசெய்யப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.