முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அ.உமாமகேஸ்வரனுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும், ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரன் சிறந்த நிர்வாகியாவார் எனக் கூறியுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியாகவும் திருகோணமலை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் பல்வேறு அரச பதவிகளையும் அவர் வகித்துள்ளார் எனவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக தமிழ் மக்களுக்கு பல சேவைகளை ஆற்றியிருந்தார் எனவும் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நண்பர் அ.உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதுடன் அவர் மக்களுக்கு மேலும் பல சேவைகளை ஆற்ற வேண்டுமென வாழ்த்துவதாகவும் சுப்பையா ஆனந்தகுமார் கூறியுள்ளார்.