இலங்கை, வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் மீள் ஒழுங்குபடுத்தல் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில்(05.07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் ( (Ms.) Ho Thi Thanh Truc) இந்நிகழ்வில் விசேட விருந்தினராக பங்கேற்றிருந்ததோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
தொழிநுட்ப மேம்பாடு, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவித்த நாடாக வியட்நாமுடன் நட்புறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை வழங்கும் என கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான பாராளுமன்ற நட்புறவின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தினார்.
தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மூலம் இலங்கையின் சொந்த ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறையாக வியட்நாமின் தொழில்நுட்ப தொழில்மயமாக்கலில் இருந்து இலங்கை கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் குறித்தும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.