இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மொஹான் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கான உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ள நிலையில் அவரது விஜயத்திற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இரு நாடுகளின் நட்புறவு, ஒப்பந்தங்கள், தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Social Share

Leave a Reply