அமெரிக்காவின் டெக்சாசை சேர்ந்த மெல்பா மெபேன் (வயது 90) எனும் மூதாட்டி தனது 16 வயதிலிருந்து தற்போது வரையில் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.
குறித்த நிறுவனத்தில் லிப்ட் ஆபரேட்டர் பணிக்கு சேர்ந்த அவர், அதே நிறுவனத்தில் ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில், விடுமுறையின்றி 74 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் 90 வயதை கடந்த குறித்த மூதாட்டி கடந்த 30ம் திகதி பணி நிறைவு பெற்றுள்ளார் என அவரை பெருமைப்படுத்தும் வகையில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாம் வீட்டில் இருந்ததை விட அவரது பணியிடத்தியிலேயே அதிக நேரத்தை செலவிட்டதாகவும், தற்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் அவர் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்மணி வேலை செய்த அனைத்து துறைகளிலும் தனக்கென ஓர் தனி முத்திரை பதித்திருப்பதாக அவர் பணியாற்றிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.