மக்கள் போராட்டத்தை மரியாதையோடு நினைவு கூருகிறோம்-சஜித்

உலகப் போராட்ட வரலாற்றில் ஒரு சிறப்பு மைற்கல்லைப் பதித்து, ஒரு வருடத்திற்கு முன்னர் இந்நாட்டுப் பிரஜைகளால் முன்னெடுக்கப்பட்ட தனித்துவமான மக்கள் போராட்டத்தை இத்தருணத்தில் நாம் மரியாதையுடன் நினைவுகூருகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தூரநோக்கற்ற, திமிர்பிடித்த மற்றும் தன்னிச்சையான ஆட்சி மூலம் நாடு ஒரு பாரதூரமான பேரிடரை நோக்கித் தள்ளப்பட்டிருந்த வேளையில் இதற்கு எதிராக இந்நாட்டின் ஒட்டுமொத்த சமூகத்திலும் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்தது.

அதன் தீர்க்கமான தருணம் தான் காலி முகத்திடல் தொண்ணூறு நாளையும் கடந்த போராட்டமாகும்.

ஒரு பென்சில் மற்றும் எதிர்ப்பு பதாகையையும் மட்டும் வைத்து நியாயம் மற்றும் மனிதநேயத்தின் பெயரால் உன்னத அபிலாஷைகளுடன் நடந்த போராட்டத்தின் இறுதி முடிவு எதேச்சதிகார ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் வீட்டிற்கு செல்ல நேரிட்டமையாகும்.

அவ்வாறிருந்தும், இந்நாட்டின் பிரஜைகள் அடைந்த வெற்றி என்ற போர்வையில் ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதோடு, இதற்குப் பிறகும் கூட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் நடந்ததைப் போன்ற அல்லது அதைவிடவும் மோசமான நிலையிலையே ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மிருகத்தனமானதொரு சர்வாதிகாரத்தால் மட்டுமே குடிமக்கள் தலைமுறைக்கு எதிராக அடக்குமுறை சார்ந்த அச்சுறுத்தலின் ஈட்டியை எய்த முடியும். என்றாலும்,ராஜபக்ச அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அதையே செய்து வருகின்றன.

உயர்ந்த நோக்கங்களுக்காக, இந்நாட்டின் வீதியிறங்கிய மக்களின் நாகரீக அபிலாஷைகளுடன் ஆவேசத்தனமான மோதலை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கமும் செயற்பட்டு வருகிறது.

குறிப்பாக போராட்டத்தின் முன்னணி பாத்திரங்களை இலக்கு வைத்து அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே அடக்குமுறையை ஆரம்பித்து. இப்போது சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் மக்கள் போராட்டம், பலமிக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியையும்,
மூன்றில் இரண்டு பெருன்பான்மை உண்டு என்று மிடுக்குத் தோரணையில் ஆடிய அதிகாரமிக்க அரசாங்கத்தையும் நான்கு சுவர்களுக்கு இடையில் சிக்க வைப்பதில் வெற்றி பெற்ற பிறகு, வெளியேற்றப்படும் வரை அதிகாரம் பெற்றிருந்தது என்பதை தற்போதைய அரசாங்கத்துக்கும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

போராட்டம் தொடங்கிய தருணத்திலிருந்து, போராட்டத்தின் நோக்கங்களும் இலக்குகளும் எமது நோக்கங்களோடும், இலக்குகளோடும் ஒத்துப்போனதால், அவர்களின் போராட்டம் எங்களின் ஆசிகளைப் பெற்றது.

ஆட்சியாளர்களின் தந்திரங்களில் மற்றும் பயமுறுத்தும் நோக்கங்களில் சிக்காமல் செயற்பட்டும்,
அகிம்சையை முன்னிலைப்படுத்தி செயற்பட்டும் ஈட்டிய மக்கள் போராட்டம் வெற்றியில் முடிந்தாலும், இந்த வெற்றிக் கோப்பையை எதிர்பார்க்காத ராஜபக்சவாதிகள் சார்ந்த கும்பலால் திருடப்பட்டுள்ளது.
அதனை மீளப் பெறுவதற்கு அகிம்சை வழியிலான அணிதிரள்வு அவசியம் என்பதை இத்தருணத்தில் வலியுறுத்துகிறோம் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply