காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்ய நடவடிக்கை!

இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள காப்புறுதிச் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கு நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காப்பீட்டுச் சட்டங்களை மறுஆய்வு செய்து, உலகளாவிய காப்பீட்டு விதிமுறைகளுக்கு இணையான வகையில் அவற்றை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகவே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த குழுவினருக்கு பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பிவைக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

அத்தகைய முன்மொழிவுகளை, legal@moj.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது எழுத்துப்பூர்வமாக அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply