பிரான்சில் பட்டாசுகளை விற்பனை செய்வது மற்றும் கைவசம் வைத்திருப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் பருந்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தடை ஜூலை 15ம் திகதி முதல் அமலுக்கு வரும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸின் தேசிய தினம் ஜூலை 14ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டில் பொது ஒழுங்குக்கு இடையூறுகள் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், உள்ளூர் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வானவேடிக்கைகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.