கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் பொறுப்பேற்பு!

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முரளிதரன் அவர்கள் நேற்று (10.07) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் முன்னிலையில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் இவர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பதவி வகித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையற்றிய க.ஸ்ரீமோகனன் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக(காணி) நியமனம் பெற்றுச்சென்றமையை அடுத்து, அவரது இடத்துக்கு எஸ்.முரளிதரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் தரம் ஒன்றினைச் சேர்ந்த இவர் தெல்லிப்பளை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக(காணி) பதவிவகித்துள்ளார் என்பதும் விசேடம்சமாகும்.

Social Share

Leave a Reply